பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

Siva

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (12:03 IST)
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் இந்த பதிலை அளித்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
 
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் விவரங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
 
வாக்காளர்களின் விவரங்கள் மிகவும் ரகசியமானவை என்றும், அவற்றை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
 
வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை கோரும் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்