உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

Prasanth Karthick
புதன், 18 டிசம்பர் 2024 (12:38 IST)

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற குகேஷுக்கு வழங்கப்பட்டுள்ள பரிசுத்தொகையில் ரூ.4 கோடி வரி பிடித்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி சுதா கடிதம் எழுதியுள்ளார்.

 

 

தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரரான குகேஷ் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்று உலக சாம்பியனாக சாதனை படைத்துள்ளார்.

 

இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வென்றதற்காக அவருக்கு உலக செஸ் சம்மௌனம் ரூ.11.34 கோடி பரிசுத் தொகையை வழங்கியுள்ளது. தமிழக அரசு குகேஷுக்கு ரூ.5 கோடியை பரிசாக அறிவித்துள்ளது. குகேஷுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையில் வரியாக ரூ.4 கோடி வரை பிடித்தம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி சுதா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், காங்கிரஸ் அரசு விளையாட்டு வீரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியது போல, தற்போதைய மத்திய அரசு வழங்கினால் அது இளம் வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்றும், மேலும் நாடாளுமன்றத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்