சுவாதி விவகாரம்; திருமாவளவன் மீது வழக்கு தொடரப்படும்: எச்.ராஜா கொந்தளிப்பு!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (09:52 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.


 
 
சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன், சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை காவல்துறை கைது செய்யவில்லை, சுவாதி ரமலான நோன்பிருந்தார், அவர் முஸ்லீமாக மாற முடிவு செய்திருந்தார் என்றும், இதெல்லாம்  ஆர்.எஸ்.எஸ். தரப்பினருக்கு தெரியும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
மேலும், பேசிய அவர் ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் சுவாதி கொலை நடந்த உடனேயே பிலால் மாலிக் தான் கொலை செய்தார் என ஏன் கூறினார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி பேசியதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கூறிய அவர், சுவாதி கொலை வழக்கில் தேவையில்லாமல் ஆர்.எஸ்.எஸ். பற்றி திருமாவளவன் குற்றம் சுமத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். ஒரு சேவை அமைப்பு. திருமாவளவன் கட்சியினர் எதாவது ஒரு சேவையில் ஈடுபட்டதுண்டா. திருமாவளவன் தனது கருத்துக்கு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்மீது வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்