இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

Prasanth Karthick

ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (14:54 IST)

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

 

தமிழக கடற்கரையோர மாவட்டங்களான நாகப்பட்டிணம், வேதாரண்யம், ராமேஸ்வரம், குமரி பகுதிகளை சேர்ந்த பல மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடித்து வரும் நிலையில், பல காலமாகவே அவர்களை இலங்கை கடற்படையினர் தொந்தரவு செய்து வருகின்றனர். மீனவர்களை கைது செய்யப்படுவதும், அவர்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, வலைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவது உள்ளிட்டவற்றால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 

இன்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர்.

 

தொடர்ந்து இலங்கை அரசு நடத்தும் அட்டூழியங்கள் குறித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டினர். அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்