மெர்சல் பட பரபரப்பை திசைதிருப்ப கமல் கைதா? பரவும் வதந்திகள்

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (15:30 IST)
தமிழகம் முழுவதும் கொந்தளித்து வந்த டெங்கு காய்ச்சல் பரபரப்பை மெர்சல் பட பிரச்சனை மறக்க வைத்துவிட்டது. தற்போது மெர்சல் படத்தால் பாஜகவின் மானம் கப்பலேறி போய்க்கொண்டிருப்பதால் இந்த பிரச்சனையை திசை திருப்ப வேறு ஒரு பிரச்சனை எழலாம் என்று கூறப்படுகிறது.



 
 
அந்த வகையில் சமீபத்தில் நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்த கமல் மீது ஏற்கனவே போலீஸ் கமிஷனரிடம் தேவராஜ் என்பவர் புகார் கொடுத்துள்ளதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
 
கமல் மீது கைவத்தால் மெர்சல் பிரச்சனை முடிந்துவிடும் என்பது போன்ற கேவலமான முடிவை அரசியல்வாதிகள் எடுக்க மாட்டார்கள் என்றும் இது வெறும் வதந்திதான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்