திருமணம் ஆகி ஒன்பதே நாள்: கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இளம்பெண்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (05:03 IST)
திருமணம் ஆகி ஒன்பது நாள் மட்டுமே ஆகிய நிலையில் புதுக்கணவன் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்த இளம்பெண் ஒருவரை கடலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.



 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது. இந்த நிலையில் திடீரென கணவரை மனைவி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசாரிடம் கணவன் தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததை ரமேஷின் மனைவி ஒப்புக்கொண்டார். ஆனால் கொலைக்கான காரணத்தை அவர் கூறவில்லை. இதனால் ரமேஷின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்