யூடியூப்பிற்கு தடையா? திகைக்க வைத்த கேள்வி!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (22:45 IST)
யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்ற கேள்வி  உயர்நீதிமன்றத்தில் எழுந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
யூடியூப் தொடர்பான வாதங்கள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிகழ்ந்துள்ளது. அப்போது யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்ற கேள்வி எழுந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது, 
 
யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? வங்கிக் கொள்ளை போன்ற விபரங்களை யூடியூப் மூலம் கற்றுக் கொடுத்து கொண்டு இருப்பதை எவ்வாறு ஆதரித்து வருகிறார்கள்?
இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? வேறு மாநிலத்தில் இருந்து தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது?
 
யூடியூபில் நல்ல விஷயங்கள் உள்ளது. ஆனால் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? யூடியூப் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்