யூடியூபை அடுத்து இனி இன்ஸ்டாவிலும் சம்பாதிக்கலாம்!

வியாழன், 20 ஜனவரி 2022 (19:34 IST)
யூடியூபை அடுத்து இனி இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது பயனாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
யூடியூபில் கணக்குகள் தொடங்கி சப்ஸ்கிரைபர்களுக்கு தேவையான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் அதில் கிடைக்கும் விளம்பரத்தை பொறுத்து வருமானம் கிடைக்கும் என்பது தெரிந்ததே 
 
அதேபோல் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்பவர்களுக்கு சப்ஸ்கிரைபர் என்ற ஆப்ஷன் வரப்போவதாகவும் அதன்மூலம் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
முதல் கட்டமாக பணம் கொடுக்கும் நடைமுறை அமெரிக்காவுக்கு மட்டும் வழங்கப்பட இருப்பதாகவும் அதன் பின்னர் படிப்படியாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்