விஜய்யின் இலவச சட்ட ஆலோசனை மையம் ஏன் தொடங்கப்படுகிறது? வழக்கறிஞர்கள் விளக்கம்

சனி, 5 ஆகஸ்ட் 2023 (18:40 IST)
சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில்  வழக்கறிஞர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட  வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:

''தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கொள்கைகள் பற்றி அறிமுகம் செய்து அதைப் பற்றி பேசினர். முதன் முறையாக சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படவுள்ளது. தளபதியின் அறிவுரையின்படிதான் எல்லாம் தொடங்கி  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு குடும்பல நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு, விபத்து, சிவில் வழக்கு ஆகியவற்றைப் பற்றி இலவச சட்ட ஆலோசனை மையத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தித் தரும் என்பதற்காகத்தான்  இதை  தளபதி மக்கள் இயக்கம் தொடக்கவுள்ளது'' என்றார்.

விஜய் இவ்வளவு நல்லது செய்யும்போது, அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர் , ''அது அவரது முடிவுதான்'' என்று கூறினார்.

மேலும், மற்றொருவர், மக்களுக்கு இலவசமான ஆலோசனை கொடுக்கும், எந்த வழக்குக்கு எப்படி அணுகுவது என்று  மக்களுக்கு இலவசமாக கூறப்படும், இது, 24/7 செயல்படும் என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்