ரஜினியின் ''ஜெயிலர் ''பட ரிலீஸ் நாளில் விடுமுறை அறிவித்த நிறுவனம்

சனி, 5 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
''யுனோ அகுவா’’ என்ற தனியார் நிறுவனம், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் பட ரிலீஸ் நாளன்று தன் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நாளுக்கு நாள் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ரஜினியுடன், மோகன் அமர்ந்திருப்பது போன்ற  புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, பெங்களூரு, திரு நெல்வேலி, செங்கல்பட்டு,அழகப்பன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கள் கிளைகளை வைத்துள்ள  பிரபல ''யுனோ அகுவா’’ என்ற தனியார் நிறுவனம், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் பட ரிலீஸை ஒட்டி, தன் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்து, அவர்களுக்கு இலவசமாக டிக்கெட்டையும் கொடுத்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A private firm announces HOLIDAY for superstar #Rajinikanth's #Jailer with free tickets for watching the film.#JailerFromAug10 pic.twitter.com/4jPwbDX9Pd

— Manobala Vijayabalan (@ManobalaV) August 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்