10 நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சனி, 5 ஆகஸ்ட் 2023 (10:47 IST)
கடந்த பத்து நாட்களாக சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்துள்ளது. 
 
கடந்த மாதம் 27ஆம் தேதி தங்கம் விலை 5580 என விற்பனையாண நிலையில்  10 நாட்களாக ஏற்றத்துடன் விற்பனையாகி வருகிறது 
 
இந்த நிலையில் நேற்றைய விலையில் இருந்து இன்று ஒரு கிராம் தங்கம் இருபது ரூபாய் உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் தங்கம் விலை நேற்று ரூ.5535 என விற்பனியான நிலையில் இன்று 20 ரூபாய் அதிகரித்து  ரூ. 5555.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44440.00என்று விற்பனை ஆகி வருகிறது. 
 
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூபாய் 6025.00 என்றும், 8 கிராம் ரூ. 48200.00 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
 
அதேபோல் வெள்ளி ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்துள்ளது என்பதும் ஒரு கிலோ ரூ. 78500.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்