தமிழகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது எப்போது?

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (16:01 IST)
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என அமைச்சர் பேட்டி. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
 
இந்நிலையில், 2-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்துவருகிறது. 
 
மத்திய அரசு அனுமதி அளித்ததுடன் தடுப்பூசி போடுவது தொடங்கப்படும். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்