ரூ.2000 கோடிக்கு மேல் மக்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (18:17 IST)
பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ரூ. 1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்புகளை தமிழக அரசு இன்று அறிவித்த நிலையில், ''முழுக்க முழுக்க மாநிலப் பேரிடர் நிதியிலிருந்தும், மாநில அரசு நிதியிலும் இருந்தே நமது திராவிட மாடல்  அரசு இப்பணிகளைச் செய்து வருகிறது'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில், தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ரூ. 1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்புகளை முதலமைச்சர்   முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
 
''பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பில் இன்று நிவாரணத் தொகுப்பை அறிவித்திருக்கிறேன்.
 
மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், உழவர்கள், கால்நடை வளர்ப்போர், சிறுகுறு வணிகர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவர்கள் என ஒவ்வொரு தரப்பினரின் பாதிப்பையும் ஆழ்ந்து உணர்ந்து இத்தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட 6000 ரூபாய் நிவாரணத் தொகை; தென் மாவட்டங்களிலும் நேற்று முதல் 6000 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நிவாரணத் தொகை என 2000 கோடி ரூபாய்க்கும் மேல் மக்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளோம்.
 
உடனடி உட்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகளுக்காக, SDRF-இல் இருந்து 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
முழுக்க முழுக்க மாநிலப் பேரிடர் நிதியிலிருந்தும், மாநில அரசு நிதியிலும் இருந்தே நமது திராவிட மாடல்  அரசு இப்பணிகளைச் செய்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்