கூட்டணியா? அவுங்களோடவா? அப்படி சொல்லவேயில்லையே: அறிக்கையில் அலறவைத்த தமாகா

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (12:56 IST)
நாடாளுமன்ற தேர்தலில் தமாகா அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறது என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தாமகா.
 
பாமக தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜக வோடுக் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவிற்கு 5 இடம் கிடைத்துள்ளது. இதற்கிடையே தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. 
 
கூட்டணி குறித்து தாமக பொதுச்செயலாளர் சேகருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், சுமூகமான முடிவு எட்ட வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும்  பல கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இணைய போகிறது எனவும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறினார்.
 
இந்நிலையில் தாமக பொதுச்செயலாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக - தமாகா கூட்டணி குறித்து நான் எதுவும் பேசவில்லை எனவும், கூட்டணி குறித்து பேச முழு அதிகாரமும் தலைவர் ஜி.கே.வாசனுக்கே இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கூட்டணி குறித்து தலைவர் தம்மை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த சொல்லவில்லை எனவும் கூறியிருக்கிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இப்படியிருக்க அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் எப்படி தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறினார். மக்களிடையே அதிமுக கதை விடுகிறதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்