சாக்கடை எங்கே ஓடுகிறது..? மு.க.ஸ்டாலின் மீது பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்...
புதன், 20 பிப்ரவரி 2019 (12:50 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் போட்டா போட்டி போட்டு கூட்டணி பேரம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக சட்டென முடிவுக்கு வந்து நேற்று பாமகவுடன் தனது கூட்டணி டீலிங்கை முடித்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் இதுகுறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதியில் பாமக வுக்கு 7 தொகுதிகளும், ராஜ்யசபாவில் 1 சீட்டு, 7பேர் விடுதலை என்ற ஒப்பந்தத்தை முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஆகும்.மக்களின் நலனுக்காக இல்லாமல் பணத்துக்காக சேர்ந்துள்ள கூட்டணி அது.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து அண்மையில்தான் புத்தகம் வெளியிட்டவர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்.
7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு எதோகூட இதன் பின்னணியில் உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுகவுடான பாமகவின் கூட்டணி பற்றி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மதியவேளையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னையிலுள்ள ஹோட்டல் கிரவுன் பிளாசாவில், தமிழக முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணைமுதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னிர் செல்வம் ஆகியோருடன் தேர்தல் கூட்டணி குறித்த இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது,அதிமுக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் இப்பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதர ராவ், பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் இதற உறுப்பினர்கள்,ஆகியோர் இப்பேச்சு வார்த்தையில் பியூஸ் கோயலுடன் இணைந்திருந்தனர்.
இறுதியாக பேச்சுவார்த்தை இறுதிவடிவம் பெற்றதை அடுத்து பாஜகவுக்கு 5 தொகுதிகள் என்று உறுதியானது. இதை செய்தியாளர்களிடமும் மகிழ்ச்சியுடன் கூறினார் பியூஸ் கோயல். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அருகில் இருந்தனர்.
இந்நிலையில் அதிமுக- பாமக கூட்டணி பற்றி ஸ்டாலின் விமர்சித்ததை பற்றி பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:
’சாக்கடை எங்கே ஓடுகிறது என்று சந்தேகம் எழுகிற வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக - பாமக கூட்டணியை அநாரிகமான வார்த்தைகளால் பேசியுள்ளார்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.