பாமக தனது தேர்தல் கூட்டணிக்காக நேற்று அதிமுக அணியில் இணைந்தது. ஆனாலும் அதற்கு முன்னர் திமுகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சிலக் காரணங்களால் திமுக கூட்டணியில் பாமக இணையமுடியாமல் போனது. அதற்கு முக்கியக் காரணமாக திமுகக் கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் பாமக இருக்கும் கூட்டணியில் தங்களால் இருக்க முடியாது என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதையும் மீறி காங்கிரஸ் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் பாமக வோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், திருமாவளவன் ரகசியமாக அமமுக துணைப்பொதுச் செயலாளர் தினகரனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த செய்தியை திருமாவளவன் மறுத்தார். அதுகுறித்தும் அதிமுக கூட்டணி குறித்தும் ஊடகங்களிடம் அவர் பேசியது பின்வருமாறு…
பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க முடியாது. கட்சியின் நலனை மனதில் வைத்து முடிவுகளை எடுக்குமாறு திமுக தலைமையிடம் நான் கூறினேன். அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பது, திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என திருமாவளவன் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை வீசியது..ஆனால் இப்போது மோடிக்கு எதிராக அலை வீசுகிறது.