'தமிழக வெற்றிக் கழகம்' உங்கள் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, "இப்போதைக்கு அதைச் சொல்ல முடியாது. ஆனால், அதே நேரத்தில் திமுகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஓர் அணியில் கொண்டுவர முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மொழிப் பிரச்சினை குறித்த கேள்விக்கு, "நான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டியது ஒன்றுதான், தமிழில் மருத்துவக் கல்வியைக் கற்றுக்கொடுங்கள், அதை ஏன் செய்யக்கூடாது? பொறியியல் படிப்பைத் தமிழில் கற்றுக்கொடுங்கள், அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? தமிழில் கற்பதை எதிர்ப்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றால் எனக்கு அதில் பிரச்சனை இருக்கிறது" என்று தெரிவித்தார்.