சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி , மயக்கம் !

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (21:40 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் தனியார் பள்ளியி ஒன்று இயங்கி வருகிறது.

இப்பள்ளியில்  படித்து வரும் மாணவர்களுக்கு  இன்று விட்டமின் மாத்திரைகள்  வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் அதிகமான மாணவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாணவ, மாணவிகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்