மத்திய உள்துறை பாதுகாப்பு ஆலோசகா் பதவியை ராஜிநாமா செய்தாா் விஜய் குமாா்ஐ.ஏ.எஸ்: என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:10 IST)
மத்திய உள்துறை பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அந்தப் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும் ராஜினாமாவுக்கு பின் அவர் டெல்லியில் தனக்கு கொடுத்த இல்லத்தை காலி செய்துவிட்டு தற்போது சென்னைக்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் தனது பதவி காலத்தில் முழு ஒத்துழைப்பு அளித்த பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
 
சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்து சாதனை செய்த விஜயகுமார் ஐ.ஏ.எஸ் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தாக்குதலையும் ஒடுக்கினார். கடந்த 2012 ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் படைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட விஜயகுமார் 2019ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்