பாஜக தேசிய தலைவா் நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுகிறதா?

திங்கள், 10 அக்டோபர் 2022 (12:32 IST)
பாஜக தேசிய தலைவராக தற்போது ஜேபி நட்டா  இருந்து வரும் நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க முடிவு எடுத்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
பாஜக தேசிய தலைவர் தலைவர் பதவி மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் வரும் ஜனவரி மாதத்துடன்  தற்போதைய பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் பதவி காலம் நிறைவடைகிறது 
 
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கும் வகையில் ஜேபி நட்டாவின் தேசிய தலைவர் பதவியை நீடிக்க பாஜக வட்டாரங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
ஜேபி நட்டாவின் தேர்தலில் உத்தி மிகப்பெரிய வெற்றிகளை தந்து கொண்டிருப்பதால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் ஜேபி நட்டா  பின் பதவிக் காலத்தை நீடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்