மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் மேலப்பாளையம் முழுவதும் சுமார் 1200க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
Edit by Prasanth.K