உளுந்தூர்பேட்டையா? உடுமலைப்பேட்டையா?: விஜயகாந்தே கன்ஃபியூஷ் ஆயிட்டாரு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (12:46 IST)
வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார் விஜயகாந்த்.


 
 
உளுந்தூர்பேட்டையில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பேசிய விஜயகாந்த், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியின் பெயரை உடுமலைப்பேட்டை என கூறினார்.
 
நான் சுத்தி சுத்தி பேசுவேன், யாரும் சத்தம் போட என கூறிய விஜயகாந்த், வெயிலா இருக்கு, யாரும் வெயிலில் இருக்க வேண்டாம் என கூறினார். பின்னர் பேச ஆரம்பித்தவர், இந்த உடுமலைப் பேட்டை ஹைவேயில் ஒரு ஹாஸ்பிட்டல் அமைக்கப்படும். ஏன்னா, இங்க ஆக்சிடெண்ட் ஆனா கடலூர் அல்லது பண்டிச்சேரிக்கு கொண்டு போக வேண்டி இருக்கிறது. அதனால, உடுமலைப் பேட்டையில் ஒரு ஹாஸ்பிட்டல் கட்டிக் கொடுப்பேன் என்றார்.
 
தான் போட்டியிடும் தொகுதியான உளுந்தூர்பேட்டையின் பெயரை உடுமலைப்பேட்டை என விஜயகாந்த் மாற்றி கூறியது சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பரவி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்