கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

Prasanth Karthick
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (16:00 IST)

மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு நடிகர் விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமாக இருந்தவர் விஜயகாந்த்.  கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது இழப்பிற்கு பல சினிமா, அரசியல் பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் நேரில் சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்.

 

நடிகர் விஜய்யின் சினிமா வருகையில் விஜயகாந்தின் பங்கு முக்கியமானதாக அமைந்திருந்தது. செந்தூரபாண்டி படத்தின் மூலம் விஜயகாந்தின் தம்பியாக விஜய் அறிமுகமானார். இந்நிலையில் நாளை கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு அழைப்பு விடுத்து நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன். உடன் சுதிஷ் உள்ளிட்டோரும் இருந்தனர். அவர்கள் விஜய்க்கு, விஜயகாந்தின் வெண்கல சிலை ஒன்றை வழங்கினர். நாளை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்