விஜய்யின் மாநாடு பெரிய வெற்றி.. அவருக்கு வாழ்த்துகள்! - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

Prasanth Karthick
வியாழன், 31 அக்டோபர் 2024 (11:38 IST)

த.வெ.க மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியல் நகர்வு குறித்த இழுபறியில் இருந்து வந்த நிலையில் இறுதியாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். ஆனால் அதே போல அரசியல் பயணத்திற்காக தயாராகி வந்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதுடன், சமீபத்தில் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார்.
 

ALSO READ: 12ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது..!
 

இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் தீபாவளி வாழ்த்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். அவரிடம் விஜய்யின் மாநாடு குறித்து கேட்டபோது “விஜய்யின் அரசியல் மாநாடு நல்ல வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்