தவெகவின் அடுத்த மாநில மாநாடு.. நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை..!

Mahendran
வியாழன், 7 நவம்பர் 2024 (18:30 IST)
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த மாநாடு நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகர் விஜய், தமிழகம் வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, கடந்த சில நாட்களுக்கு முன் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு அரசியல் கட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பரபரப்பு இன்னும் நீங்கவில்லை.
 
இந்த நிலையில், சமீபத்தில் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த விஜய், முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக முடித்து காட்டியதற்கு நன்றி தெரிவித்தார். அவர், அடுத்த மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என்று கூறி, அடுத்த மாநாட்டிற்கான தேதி மற்றும் இடம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. 
 
தற்போது, அவர் தளபதி 69 படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையில் தவெகவின் இரண்டாவது மாநாடு நடைபெறும் தேதி, இடம் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும், இரண்டாவது மாநாடு தென் மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்