ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணா, “ கமல்ஹாசன் போல விஜய் முயற்சி செய்து பார்க்கட்டும், ஆனால் அவரால் வெற்றி பெற முடியாது,” என கூறியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தளபதி விஜய், பிப்ரவரி மாதத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கினார். சமீபத்தில் நடந்த அவரின் மிகப்பெரிய மாநாடு, அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்தது.
விஜய், திமுக கூட்டணிக்கு எதிரான ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கி, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவோ அல்லது வலுவான எதிர்க்கட்சியாக அமையவோ வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. பலரும் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “விஜய்யால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது, அவரால் அரசியலில் ஜெயிக்க முடியாது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.