சீமானை வாழ்த்திய உச்ச நட்சத்திரம் விஜய்-நாம் தமிழர் கட்சி

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (13:55 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக இருந்தவர் சீமான். இவர், பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அதன்பின்னர், அமைதிப்படை, பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார், மகிழ்ச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் களமிறங்கிய சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

இன்று பிறந்த நாள் காணும் சீமானுக்கு  நடிகர் கமல், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போனில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் என நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பட்சிராஜன் தன் வலைதள பக்கத்தில், சீமான் அண்ணனை அழைத்து வாழ்த்திய தமிழ்த் திரையுலக உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்