அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்.. எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Mahendran

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (12:54 IST)
சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் என இன்று வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார். அவை மரபுப்படி, எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால் திமுக கூட்டணி கட்சியினருக்குமே மட்டுமே அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
 
எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை. கூட்டணி கட்சியினர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானங்களை பேசும் போது நேரலை செய்கிறார்கள். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது நேரலை செய்யவில்லை.
 
"நாங்கள் மக்கள் பிரச்சனையையே தான் சட்டப்பேரவையில் பேசுகிறோம். ஏன் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது? அவை தலைவர் அப்பாவு ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
 
அவரது இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சபாநாயகர் அப்பாவு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்