185 தொகுதிகளில், பூத் கமிட்டி.. விஜய் மக்கள் இயக்கம் தீவிரம்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (14:27 IST)
தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்கம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பேசி ஆய்வு செய்ததாகவும், பூத் கமிட்டி விவரங்கள் வெளியிடுவதில் குளறுபடி செய்த தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமாரை நடிகர் விஜய் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
 
அதேபோல் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை பாராட்டும் விஜய், குளறுபடியில் ஈடுபடும் நிர்வாகிகளை எச்சரித்து, அறிவுரையும் வழங்குகிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
 
 இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது நடிகர் விஜய் அரசியலில் இறங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் அரசியலில் இறங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. 
 
வரும் 2024 தேர்தலிலே ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு தனக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை தெரிந்து கொண்டு 2026 ஆம் ஆண்டு முழு முயற்சியில் அரசியலில் இறங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்