பிரபல ஓடிடியில் வெளியான சந்திரமுகி 2!

சனி, 28 அக்டோபர் 2023 (13:51 IST)
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங்கும் எதிர்பார்த்த படி போகவில்லை.

தற்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்