சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டுக்கு ஆதரவு தந்தார்கள்… தென்னாப்பிரிக்க வீரர் நெகிழ்ச்சி!

சனி, 28 அக்டோபர் 2023 (14:06 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது. அதையடுத்து தென்னாப்பிரிக்க அணி இலக்கை துரத்தி பரபரப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி உலகக் கோப்பை அணிகளின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. முதலிடத்தில் இருந்த இந்தியா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற தென்னாப்பிரிக்காவின் ஷாம்சி “நான் முதல்முறையாக சென்னையில் விளையாடுகிறேன்.  இந்த ரசிகர்களின் ஆரவாரம் அற்புதமாக இருந்தது. ரசிகர்கள் இரண்டு அணிகளுக்குமே ஆதரவு அளித்தார்கள். கடைசி ஓவர்களில் நாங்கள் ஒரு ஒரு ரன்னாக எடுத்த போதும் ஆர்ப்பரித்தார்கள். அதுபோல ஷாகின் அப்ரிடி விக்கெட் எடுத்த போதும் ஆர்ப்பரித்தார்கள். மொத்தத்தில் நல்ல கிரிக்கெட்டுக்கு ஆதரவளித்தனர்” என பாராட்டியுள்ளார

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்