விஜய்யிடம் இருந்து வந்த முதல் அரசியல் அறிக்கை.. சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு..!

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (06:58 IST)
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் நேற்று இரவு முதல் முறையாக அரசியல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் சிஏஏ சட்டம் அமல் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கைகள் விஜய் கூறியிருப்பதாவது:
 
சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. 
 
தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்’ என்று விஜய் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்தியில் ஆளும் பாஜகவை கண்டித்து ஒரு வரி கூட இந்த அறிக்கையில் என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்