இயக்குனர் பாலாவிற்கு விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் விகடன் விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் விருது மெர்சல் படத்தில் நடித்த விஜய்க்கு வழங்கப்பட்டது. அந்த விருது விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாலா மேடையில் பேசும்போது, இந்த விழாவில் திறமையில்லாதவர்கள் பலர் விருது பெற்றுள்ளனர். அதேபோல், தகுதி இல்லாத சிலருக்கும் விருது கொடுக்கப்பட்டுள்ளது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேசியிருந்தார். பாலா இவ்வாறு மேடையில் பேசியது பெரும் சர்சையை கிளப்பியது. அவர் யாரை குறிப்பிட்டு இப்படி பேசியிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இயக்குனர் பாலா விஜய்யைதான் மனதில் வைத்து பேசியுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. எனவே, கோபமடைந்த விஜய் ரசிகர்கள் பாலாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.