ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி’ பாடல் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் விவேக். அதன்பிறகு ஏகப்பட்ட படங்களில் பல பாடல்களை எழுதிய விவேக், விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்தில் பாடல் எழுதியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா வெங்கட் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
“விஜய் ஆண்டனி சாரின் இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் இது. அவருடன் பணிபுரிந்து அருமையான அனுபவமாகும். கிருத்திகா அவர்களுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந்திருந்தாலும், ஒரு படத்திற்காக அவருடன் பணிபுரிவது இது தான் முதல் முறை. இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி சார் மிகவும் அசத்தலான பாடல்களை தந்துள்ளார்.இசையமைப்பாளராக அவர் தந்துள்ள அருமையான பாடல்களில் இப்பட பாடல்கள் நிச்சயம் இடம்பெறும்.
என்னை கவர்ந்த அவரது சிறந்த பாடல்களில் இப்பட பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். விஜய் ஆண்டனி சாரும், கிருத்திகா அவர்களும் எனக்கு தந்த சுதந்திரம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனது வரிகளை படித்ததும் விஜய் ஆண்டனி சார் எனக்கு கால் செய்து பாராட்டினார். இந்த பாடலும் இந்த படமும் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களால் நிச்சயம் ரசிக்கப்பட்டு பாராட்டப்படும் என நான் நம்புகிறேன்” என்கிறார் விஜய்.