காவல் துறையினருக்கு உதவி செய்த விஜய், அஜித் ரசிகர் மன்றத்தினர் !

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (21:50 IST)
சீனாவில் இருந்து இந்தியா உட்பல உலகில் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 69 ஆக அதிகரிப்பு. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 69 ஆக அதிகரித்துள்ளது.  எனவெ மகாராஷ்டிராவில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு- நாடு முழுவதும் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 2372 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  நெல்லை மாவட்ட துணைகமிஷனரிடம், விஜய் மற்றும் அஜித் ரசிகர் மன்றத்தினர், காவலர்கள் நலனுக்கான குடிநீர் பாட்டில் மற்றும் மாஸ்குகளை வழங்கினர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட நெல்லை மாவட்ட துணைகமிஷர் அர்ஜூன் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில், காவலர் நலனுக்காக 200 மாஸ்க் மற்றும் 100 குடிநீர் பாட்டில் வழங்கிய நெல்லை நகர இளைஞரணி விஜய் மக்கள் இயக்கத்தினர். மாநகர காவல்துறை சார்பாக அன்பும் நன்றியும் என பதிவிட்டுள்ளார்.

தனது இன்னொரு பதிவில், திருநெல்வேலி நடிகர் அஜீத்குமார் ரசிகர்கள் சார்பாக காவலர்கள் நலனுக்காக 400 குடிநீர் பாட்டில்கள் வழங்கினர். மாநகர காவல் சார்பாக அன்பும் நன்றியும். @Thalafcnellai என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்