விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (17:22 IST)
விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் விக்னேஷ் மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்