”சில விமர்சகர்களின் கூற்றுகளைப் பொய்யாக்கி”… KRK விமர்சனங்கள் பற்றி விக்னேஷ் சிவன் டிவீட்!

திங்கள், 2 மே 2022 (16:52 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இரண்டாம் பாதி முழுவதும் இழுவையாக இருப்பதாகவும், காதல் காட்சிகளோ நகைச்சுவை காட்சிகளோ ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட வில்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுபற்றிய விமர்சனங்கள் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் டிவிட்டர் பக்கத்தில் “பெரும்பான்மையான பொது மக்களின் ரசனைகளிலிருந்து தனித்த ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்