ஒரே நாளில் போடப்பட்ட சாலை.. ஒரே நாளில் அகற்றம்! – வேலூர் மக்கள் வியப்பு!

வியாழன், 30 ஜூன் 2022 (09:01 IST)
வேலூரில் ஒரு நாள் இரவில் அமைக்கப்பட்ட சாலை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரே நாள் இரவில் வேகமாக அகற்றப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் மெயின் பஜார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த வாகனங்களை கூட அகற்றாமல் இரவோடு இரவாக அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதை தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்ட அந்த சாலை வேகமாக அகற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் சாலையை அமைத்து மறு நாளில் அதை அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்