பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் சென்னையை அடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது