வேலூரில் ஷவர்மா விற்பனைக்கு தடை?

திங்கள், 9 மே 2022 (16:09 IST)
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
சமீபத்தில் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் கடை ஒன்றில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சவர்மா கடைகளில் ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டில் தரமற்ற இறைச்சிகள் சிக்கி அவை அழிக்கப்படுவதோடு கடைகளுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமற்ற முறையில் ஷவர்மா, அசைவ உணவுகளை விற்பனை கடைகளுக்கு  சீல் வைக்கப்படும் என்று நகர மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
முன்னதாக ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.  ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஷவர்மா தயாரிப்பதற்கான உயிரிய வழிமுறையை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதனை உண்பதை தவிர்க்கவும் என தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்