வேலூரில் இருந்து சென்னைக்கு 95 நிமிடங்களில் வந்த இதயம்!

ஞாயிறு, 1 மே 2022 (17:32 IST)
வேலூரிலிருந்து சென்னைக்கு இதயம் ஆம்புலன்ஸ் மூலம் 95 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டது 
 
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் இதயம் தானமாகத் பெறப்பட்டதை அடுத்து அந்த இதயம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து வரப்பட்டது
 
வேலூரில் இருந்து சென்னை வரை போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆம்புலன்சுக்கு அனைத்து வாகனங்களும் வழி விட ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் அதாவது 95 நிமிடத்தில் வேலூரில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தது.
 
இதனை அடுத்து இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இதனை அடுத்து போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்