2014 -15-ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) பதவிக்கான பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விஏஒ [கிராம நிர்வாக அலுவகர்] பதவிக்கான 813 காலிப்பணியிடங்களின் நியமனத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி நடத்தியது.
தற்போது இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் [TNPSC] அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.