மூன்று முடிவுகள் உடனடியாக தேவை: வைரமுத்து

வியாழன், 24 மே 2018 (12:04 IST)
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தில் உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், தூத்துகுடியில் அமைதி திரும்பவும் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தற்போது உடனடியாக மூன்று முக்கிய முடிவுகள் தேவை என கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல், பெட்ரோல் டீசல் விலையை குறைத்தல், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவையே அந்த மூன்று முக்கிய முடிவுகள் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டில் கூறியதாவது: 
 
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது 
என்று மாநில அரசும், 
பெட்ரோல் விலை பெரிதும் குறைக்கப்பட்டது 
என்று மத்திய அரசும், 
போராட்டம் முடிவுக்கு வந்தது 
என்று பொதுமக்களும் அறிவிப்பதுதான் 
நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும்.
 
வழக்கம்போல் நெட்டிசன்கள் வைரமுத்துவின் இந்த கருத்தை ஒருசிலர் ஆதரித்தும், ஒருசிலர் கடுமையாக விமர்சித்தும் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர், 'எல்லா ஆலைகள் ,தொழிற்சாலைகளை மூடிவிடுவோம் ! அப்புறம் எல்லாரும் கவிதை எழுதிப் பிழைப்போம் ! உங்க மாதிரி சினிமாவுக்கு எழுதினா நல்லா பணம் பார்க்கலாம்' என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்