ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை

வியாழன், 24 மே 2018 (11:08 IST)
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு மோடியை விமர்சித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று வரை அதன் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை.
 
அரசியல் தலைவர்கள் பலரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள் இந்த சம்பவம் குறித்து சரியான பதில் அளிக்க மறுத்து வருகின்றனர்.
 
காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு காரணம் மத்திய அரசுதான் என்று குற்றம்சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 
 
மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது என்று பதிவிட்டு இருந்தார்.
 
இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவும், ஸ்டெர்லைட்டுக்கும் சம்பந்தமில்லை. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்