ஸ்டெர்லைட் வீடியோ வெளியிட்ட காயத்ரிக்கு நெட்டிசன்கள் பதில்

வியாழன், 24 மே 2018 (11:19 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன் தினம் தூத்துக்குடியில் அரங்கேறிய கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி  மக்கள் 10க்கும் மேற்பட்டோர் தமிழக போலீசாரால் கொல்லப் பட்டனர். இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவர் இரத்த ஒழுகிய நிலையில் உள்ள வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் இரவு  நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மக்களை வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
 
காயத்ரி ரகுராம் இந்த வீடியோவை வெளியிட்டு, இது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையேயான போர் இல்லை என்றும், நாம் அனைவரும் போலீசார் மக்களை காயப்படுத்தியது, சுட்டது ஆகியவற்றை தான் பார்த்தோம். போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கவில்லை. அதனால் தான் இந்த வீடியோவை  வெளியிட்டேன். நான் யார் பக்கமும் இல்லை. மக்களும், போலீசாரும் பாதிக்கப்பட்டடுள்ளனர். நாம் அனைவரும் தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது என்று  பதிவிட்டுள்ளார் காயத்ரி ராகுராம்.
 
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதி போராட்டம் எப்படி கலவரமானது? என்று காயத்ரி  ட்வீட் செய்துள்ளார். 
 
அதற்கு பதில் அளிக்கும் விதமாக நெட்டிசன்கள், தூத்துக்குடியில் எந்த போலீஸ்காரரும் பலியாகவில்லை. அப்பாவி மக்கள்தான் பலியாகியுள்ளனர். உங்களிடம் பேசுவதால் எந்த பலனும் இல்லை என பதில் அளித்துள்ளனர்.

Did not want to post the audio horrible words and hate. #nomoreviolence #enoughisenough #nohate. It’s not a war between ppl and police. Political mileage induced on ppl. #politicaldrama #Thoothukkudi #bansterlite pic.twitter.com/qxxOON4jMZ

— Gayathri Raguramm (@gayathriraguram) May 24, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்