மீன்கள்தான் உண்பதற்கு மீனவர்கள் அல்ல: வைரமுத்து கண்டனம்

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (15:42 IST)
தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, கவிஞர் வைரமுத்து இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார். 


 

 
தமிழக மீனவர் பிரிட்ஜோ, இந்திய எல்லைப் பகுதியை கடந்ததாக இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மரணத்துக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட குண்டு இலங்கை கடற்படையினருடையது என்பதை உறிதி செய்த பின் அவர்கள் மீது நேற்று மாலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு வழக்கம் மவுனம் காத்து வருகிறது. தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீனவர் படுகொலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
 
கடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்ல என்று கூறியுள்ளார்..
 
அடுத்த கட்டுரையில்