போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே கட்சி நடத்தும் வைகோ: பொன் ராதாகிருஷ்ணன்

திங்கள், 28 ஜனவரி 2019 (07:57 IST)
வைகோவின் மதிமுக கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை எந்த  ஒரு தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை என்பதும் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வைகோவே போட்டியில் இருந்து பின்வாங்கினார் என்பதும் தெரிந்ததே
 
மேலும் ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவரை முதல்வராக்குவதற்காக கட்சி நடத்துவது வைகோ ஒருவராகத்தான் இருக்கும் என்ற விமர்சனமும் அவர் மேல் இருப்பதுண்டு.
 
ஆனால் எந்த ஒரு விஷயத்திற்கும் போராட்டம் நடத்துவதில் வைகோதான் முதல் நபராக இருப்பார். ஆனால் அநத போராட்டத்திலும் ஒரு பின்னணி இருப்பதாக கூறுவதுண்டு. இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி தமிழகம் வந்தால் வரவேற்பார், ஆனால் பிரதமர் மோடி வந்தால் மட்டும் கருப்புக்கொடி காட்டுவார் என்று அரசியல் விமர்சகர்கள் அவர் மீது விமர்சனம் வைப்பதுண்டு
 
இந்த நிலையில் வைகோ குறித்து தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்காமல், போராட்டம் நடத்துவதற்காக மட்டுமே வைகோ கட்சியை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது குறித்து கருத்து கூறிய அமைச்சர், 'தமிழுக்கும் தமிழ்த்தாய்க்கும் அவமானம் ஏற்படும் விதமாக பிரதமர் மோடி நடந்து கொள்ள மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்