பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோ மீது செருப்பு வீச்சு: பெரும் பரபரப்பு

ஞாயிறு, 27 ஜனவரி 2019 (13:11 IST)
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பாஜக மகளிர் அணியை சேர்ந்த சிலர் செருப்புகளை வீசினர் 
 
மதுரை பாண்டி பஜார் அருகில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தயாராக தனது தொண்டர்களுடன் நின்றிருந்தார். அப்ப்போது  அந்த வழியாக பேருந்தில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற பாஜக மகளிர் அணியினர் வைகோ மீது சரமாரியாக பத்துக்கு மேற்பட்ட செருப்பை வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த மதிமுகவினர் அந்த பேருந்தின் மீது செருப்புகளை வீச அந்த இடமே ரணகளமானது
 
இந்த நிலையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டியதாக வைகோ மற்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
 
பிரதமர் மோடி மீதும் அவருடைய ஆட்சி மீதும் அதிருப்தி இருந்தால் அவரை பதவியில் இருந்து இறக்க அரசியல்ரீதியில் காய்களை நகர்த்த வேண்டும் என்றும், அதைவிடுத்து பிரதமர் என்ற பதவிக்கு மதிப்பு தராமல் கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் நடுநிலையாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் 'மக்கள் நல கூட்டணி' என்று ஆரம்பித்து ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத வைகோ, ஒரு பிரதமரை அரசியல்ரீதியாக தேர்தல் ரீதியாக வீழ்த்துவது என்பது சாத்தியமே இல்லை என்று நெட்டிசன்கள் கூறுகின்ற்னார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்