அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:21 IST)
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்