இந்நிலையில் வடகிழக்கு பருவமழைகான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.